+41 7 66 40 63 04

Support

Blog

ஈபெல் கோபுரம்

La Tour Eiffel
Tour Eiffel Wikimedia Commons.jpg

The Eiffel Tower as seen from
the Champ de Mars

ஈபெல் கோபுரம் is located in பாரிசு

ஈபெல் கோபுரம்
Location within பாரிசு
Record height
Tallest in the world from 1889 to 1930[I]
பொதுவான தகவல்கள்
வகை அவதானிப்புக் கோபுரம்,
வானொலி ஒலிபரப்புக் கோபுரம்
இடம் பாரிசு, பிரான்சு
ஆள்கூற்று 48°51′29.6″N 2°17′40.2″Eஆள்கூற்று : 48°51′29.6″N 2°17′40.2″E
கட்டுமானம் ஆரம்பம் 1887
நிறைவுற்றது 1889
ஆரம்பம் 31 மார்ச் 1889
உரிமையாளர் பாரிசு நகரம், பிரான்சு
Management Société d’Exploitation de la Tour Eiffel (SETE)
Height
Antenna spire 324.00 m (1,063 ft)
கூரை 300.65 m (986 ft)
Top floor 273.00 m (896 ft)
Technical details
தள எண்ணிக்கை 3
உயர்த்திகள் 9
Design and construction
கட்டிடக்கலைஞர் ஸ்டீவன் சவஸ்ட்ரி
அமைப்புப் பொறியாளர் மொரிசு கொச்லின்,
ஏமிலி நோகியே
முதன்மை ஒப்பந்தகாரர் அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்

ஈபெல் கோபுரம் (பிரெஞ்சு: Tour Eiffel, /tuʀ ɛfɛl/) பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும். அத்துடன், உலகம் முழுவதிலும், இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது. இதை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபெல்ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக் கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க வருகிறார்கள். இக் கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28 ஆம் திகதி பெற்றது.

அறிமுகம்

1887 தொடக்கம் 1889 வரையான காலப்பகுதியில், இவ்வமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது. 1889, மார்ச் 31 ஆம் திகதி தொடக்கவிழா நடைபெற்று, மே 6 இல் திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தினார்கள். அக்காலத்திய பாதுகாப்புத் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில், உயர்த்திகளைப் பொருத்தும்போது, ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள, தொலைக்காட்சி அண்டெனாவைச் சேர்க்காது, 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 10,000 தொன்களிலும் (2 கோடியே 10 இலட்சம் இறாத்தல்) கூடிய நிறையை உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்டபோது, உலகின் அதிக உயரமான அமைப்பு இதுவேயாகும். இதன் பராமரிப்புக்காக, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 தொன்கள் கடும் மண்ணிறப் பூச்சு மை பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலைமாறும் போது, உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக, ஈபெல் கோபுரத்தின் உயரத்தில் பல சதம மீட்டர்கள் வேற்பாடு ஏற்படுகின்றது.

இது கட்டப்பட்ட காலத்தில், எதிர்பார்க்கக் கூடியவகையில், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இராதென்றே கருதினார்கள். இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது.

ஆரம்பத்தில், இக் கோபுரத்தை 20 ஆண்டுகள் அவ்விடத்தில் நிறுத்திவைப்பதற்கு ஈபெல் அநுமதி பெற்றிருந்தார், எனினும், தொடர்புகளுக்கு இது மிகவும் பெறுமதி மிக்கதாக இது இருந்ததனால், அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னும், கோபுரம் அங்கே நிற்க அனுமதிக்கப்பட்டது.

கட்டமைப்பு

ஐஃபல் கோபுரத்தின் அடித்தளம் 1887ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிழக்கு மற்றும் தெற்கு கால்கள் நேராகவும் மற்றும் ஒவ்வொரு கால்களும் 6 அடி 6 அங்குலம் உள்ள திண்ணமான சிமிட்டி பலகையில் நிறுத்தப்பட்டது. மற்ற இரு கால்களும், சேனி நதி அருகே இருந்ததால் ஒவ்வொன்றிக்கும் இரண்டு ஆழ் அடித்தளம் தேவைப்பட்டது.அவை அழுதப்பட்ட காற்று கேய்சான்கள் மூலமாக (49 X 20 X 22 அடி ) அமைக்கப்பட்டது. இந்த பலகையானது இரும்பு வேலைப்பாடுகளை(லாடம்) தாங்கக்கூடிய வளைந்த தலை உடைய சுண்ணாம்பு தொகுதியால் அமைக்கப்பட்டது.இந்த லடாமானது 25 அடி நீளமும் 4 அங்குலம் சுற்றளவும் கூடிய திருகு அச்சாணியால் இரும்பு வேலைப்பாட்டுடன் கோர்க்கப்பட்டது.

நிகழ்ச்சிகள்

ஜனவரி 12, 1908 ல், முதலாவது தொலைதூரத் தகவல் வானொலி கோபுரத்திலிருந்து அனுப்பப்பட்டது.

1929 ல், கிறிஸ்லெர் கட்டிடம் நியு யார்க்கில் கட்டி முடிக்கப்பட்டபோது, ஈபெல் கோபுரம், உலகின் அதி உயர்ந்த அமைப்பு என்ற பெயரை இழந்தது.

அடால்ஃப் ஹிட்லர், இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பாரிஸுக்கு விஜயம் செய்தபோது, அவர் 1792 படிகளையும், ஏறியே உச்சிக்குச் செல்லட்டும் என்பதற்காக, பிரெஞ்சுக்காரர் அதன் உயர்த்திகளைச் செயலிழக்கச் செய்தனர். அதனைப் பழுதுபார்க்கத் தேவைப்படும் உதிரிப்பாகத்தைப் பெற்றுக்கொள்வது, யுத்தச் சூழலில் முடியாது என்று கருதப்பட்டதெனினும், நாஸிகள் புறப்பட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே அது செயல்படத் தொடங்கிவிட்டது. ஹிட்லர் கீழேயே நின்றுவிட்டுச் சென்றுவிட்டார்.

ஜனவரி 3, 1956 ல் தீயொன்றினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.

1959ல் தற்போதுள்ள வானொலி அலைவாங்கி அதன் உச்சியில் பொருத்தப்பட்டது.

தொடர்பாடல்

20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, வானொலி ஒலிபரப்பியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1950 வரை, மின்கம்பி மூலமாகவே இணைக்கப்பட்டிருந்தது. 1909ம் ஆண்டு நெடுந்தொலைவு அலைபரப்பிகள், கட்டிடத்தின் அடியில் பதிக்கப்பட்டது. தெற்கு தூணிலிருக்கும் இந்த அலைபரப்பியை இப்பொழுதும் காணலாம். இன்று, இரு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் ஈபெள் கோபுரத்தின் மூலம் தங்கள் அலைவரிசைகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது.

பண்பலை

அலைவரிசை kW சேவை நிறுவனம்
87.8 MHz 10 பிரான்சு இன்டர்
89.0 MHz 10 RFI பாரீஸ்
89.9 MHz 6 TSF ஜாஸ்
90.4 MHz 10 நாஸ்டல்கி
90.9 MHz 4 சான்ட் பிரான்சு

பிரதிபண்ணல்களும், போலிகளும்

ஈபெல் கோபுரத்தின் பிரதிகளை உலகம் முழுவதும் காணலாம் அவற்றுல் முக்கியமானவை சில:

 • டோக்கியோ, யப்பான் டோக்க்யோ கோபுரம் என அழைக்கப்படு இது ஈபெல் கோபுரத்தைவிட 13 மீட்டர் உயரமானதாகும்.(அளவு விகிதம் 1.04:1)

உலகின் உயரமான கோபுரங்கள்

பெயர் மொத்த உயரம் திறக்கப்பட்ட ஆண்டு நாடு நகர் குறிப்புகள்
டோக்கியோ ஸ்கை ட்ரி 2,080 ft (634 m) 2011 சப்பான் டோக்கியோ
கியிவ் தொலைக்காட்சி நிலைய கோபுரம் 1,263 ft (385 m) 1973 உக்ரைன் கியிவ்
தாசுகெந்த் கோபுரம் 1,230 ft (375 m) 1985 உஸ்பெகிஸ்தான் தாசுகெந்த்
சவுசான் தீவு பாலத்தின் கோபுரம் 1,214 ft (370 m) 2009 சீனக் குடியரசு சியாங்கயின்
யாங்சட் ஆற்றின் குறுக்கேயுள்ள பாலத்தின் கோபுரம் 1,137 ft (347 m) 2003 சீனக் குடியரசு சியாங்கயின்
டிராகன் கோபுரம் 1,102 ft (336 m) 2000 சீனக் குடியரசு ஆர்பின்
டோக்கியோ கோபுரம் 1,091 ft (333 m) 1958 சப்பான் டோக்கியோ
விட்டி தொலைக்காட்கி கோபுரம் 1,078 ft (329 m) 1962 ஐக்கிய அமெரிக்கா சோர்வுத், விஸ்கன்சின்
டபுள்யு.எஸ்.பி. தொலைக்காட்கி கோபுரம் 1,075 ft (328 m) 1957 ஐக்கிய அமெரிக்கா அட்லான்டா, ஜார்ஜியா

பிரான்சிலுள்ள ஈபெல் கோபுரத்தைவிட உயரமான கோபுரங்கள்

பெயர் மொத்த உயரம் திறக்கப்பட்ட ஆண்டு கட்டிட வகை நகர் குறிப்புகள்
நெடுந்தொலைவு அலைபரப்பி 350 m (1,150 ft) 1974 உயர் கோபுரம் அலோயஸ்
எச்.டபுள்யு.யு அலைபரப்பி 350 m (1,150 ft)  ? உயர் கோபுரம் ரோஸ்நே இராணுவ அலைபரப்பி
வியாதக் தி மில்லாவு 343 m (1,125 ft) 2004 பாலத்தின் தூண் மிலாவு
நியார்ட்-மைசோனே தொலைக்காட்சி கோபுரம் 330 m (1,080 ft)  ? உயர் கோபுரம் நியார்ட்
மான்ஸ்-மாயத் அலைபரப்பி 342 m (1,122 ft) 1993 உயர் கோபுரம் மாயத்
லா ரெஜினே அலைபரப்பி 330 m (1,080 ft) 1973 உயர் கோபுரம் சாயிசாக் இராணுவ அலைபரப்பி
ரோமுலஸ் அலைபரப்பி 330 m (1,080 ft) 1974 உயர் கோபுரம் ரோமுலஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரிஸ்

பாரிஸ் அல்லது பாரி எனப்படுவது பிரான்ஸ் நாட்டின் தலை நகரமாகும். உலகத்தில் உள்ள‌ நகரங்களிலேயே மிக அழகிய நகரம் என்று பெயரெடுத்த பாரிஸ், நாட்டிலுள்ள மிகப் பெரிய நகரமும் இதுவே. இந் நகரம் சீன் நதியினால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வலது கரை வடக்கிலும், சிறிய இடது கரை தெற்கிலும் உள்ளது. இந்த ஆறு, அதன் கரையிலுள்ள மர வரிசைகளோடு கூடிய நடை பாதைகள் (quais), திறந்த வெளிப் புத்தக விற்பனை நிலையங்கள், ஆற்றின் வலது, இடது கரைகளை இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள பாலங்கள் என்பவற்றுக்குப் பெயர் பெற்றது. சம்ஸ் எலிசீஸ் (Champs-Élysées) போன்ற மரவரிசைகளோடு கூடிய “புலேவாட்”டுகள் மற்றும் பல கட்டிடக்கலைச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்களுக்கும்கூடப் பாரிஸ் புகழ் பெற்றது.இந்நகர் அண்ணளவாக 20 லட்சம் சனத்தொகையைக் கொண்டது (1999 கணக்கெடுப்பு: 2,147,857). பிரெஞ்சு மொழியில் aire urbaine de Paris என வழங்கப்படும் பாரிஸின் பெருநகரப் பகுதியில் சுமார் 1.1 கோடி மக்கள் (1999 கணக்கெடுப்பு: 11,174,743) வசிக்கிறார்கள்.

 

வரலாறு

(முழுமையான விவரங்களுக்குப் பாரிஸின் வரலாறு கட்டுரையைப் பார்க்கவும்)

பாரிஸ் என்ற பெயர், ரோமர் இப் பிரதேசத்தை ஆக்கிரமித்த காலத்தில் அங்கே வாழ்ந்துவந்த “கலிக்” இனக் குழுவின் பெயரான பரிசிஸ் என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது.

வரலாற்று அடிப்படையில் பாரிஸின் மையக்கரு, பலைஸ் டி ஜஸ்டிஸ் (Palais de Justice) மற்றும் நோட்ரே-டேம் டி பாரிஸ் தேவாலயம் என்பவற்றினால் பெரிதும் இடங் கொள்ளப்பட்டுள்ள, இலே டி லா சிட்டே (Île de la Cité) எனப்படும் ஒரு சிறு தீவாகும். இது பெரும்பாலும் 17ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட அழகிய வீடுகளைக்கொண்ட இன்னொரு தீவான இலே செயிண்ட்-லூயிஸ் என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கி.மு 52ல் ரோமர் வரும் வரை பாரிஸில், கலிக் இனக்குழுவினர் வாழ்ந்து வந்தனர். இவர்களை ரோமர் பாரிஸீ என அழைத்தனர், எனினும் நகரத்தின் பெயரை “சதுப்பு இடம்” எனப் பொருள்படும் லூட்டேசியா எனவே குறிப்பிட்டனர். சுமார் 50 வருடங்களுக்குப் பின்னர், நகரம், தற்போது லத்தீன் பகுதி என வழங்கும், சீன் நதியின் இடது கரைக்கு விரிவடைந்தது, இது பின்னர் “பாரிஸ்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ரோமர் ஆட்சி 508ல் முடிவடைந்தது. பிரான்க் குளோவியஸ், பாரிஸை, பிரான்க்ஸின் மெரோவிங்கியன் வம்சத்தின் தலைநகரமாக ஆக்கினான். 88 களில் இடம்பெற்ற Viking ஆக்கிரமிப்புகள், இலே டி லா சிட்டேயில் கோட்டை ஒன்றைக் கட்டவேண்டிய நிலையைப் பாரிஸியர்களுக்கு ஏற்படுத்தின. மார்ச் 28, 845 ல், ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் Viking தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது, எனினும் பெருந்தொகையைக் கப்பமாகப் பெற்றுக்கொண்டு அவன் பாரிஸை விட்டு நீங்கினான். பிற்காலக் கரோலிங்கியன் அரசர்களின் வலிமைக் குறைவினால், பாரிஸின் கவுண்ட்கள் படிப்படியாக வலிமை பெற்று வந்தனர். இதன் விளைவாக பாரிஸின் கவுண்ட், ஓடோ நிலப் பிரபுக்களினால் பிரான்சின் அரசனாகத் தெரியப்பட்டான், எனினும் சார்ள்ஸ் IIIயும் அரியணைக்கு உரிமை கோரினான். இறுதியாக 987ல் இறுதிக் கரோலிங்கியனின் மறைவுக்குப் பின், பாரிஸின் கவுண்டான ஹியூ கப்பெட் அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான்.

11 ஆம் நூற்றாண்டில் நகரம் ஆற்றின் வலது கரைக்கும் விரிவடைந்தது. பிலிப் II அகஸ்தஸின் காலத்தையும் (1180-1223) உள்ளடக்கிய 12ஆம், 13ஆம் நூற்றாண்டுகளில் நகரம் மிகவும் வளர்ச்சியடைந்தது. முக்கிய பாதைகளுக்குத் தளமிடப்பட்டது, முதல் லூவர் ஒரு கோட்டையாகக் கட்டப்பட்டது, நோட்ரே டேம் தேவாலயம் அடங்கலாகப் பல தேவாலயங்கள் கட்டப்பட்டன அல்லது ஆரம்பிக்கப்பட்டன. வலது கரையிலிருந்த பல கல்விக்கூடங்கள் Sorbonne ஆக ஒழுங்கமைக்கப்பட்டன. அல்பர்ட்டஸ் மக்னஸ், சென். தோமஸ் அக்குவைனஸ் போன்றவர்கள் இவற்றைச் சேர்ந்த ஆரம்பகால அறிஞர்களாயிருந்தார்கள். 14 ஆம் நூற்றாண்டில் Black Death தாக்கம் காரணமாக ஏற்பட்ட தற்காலிக தடங்கல் தவிர மத்திய காலப் பகுதியில், பாரிஸ் ஒரு வர்த்தக மற்றும் அறிவு சார்ந்த மையமாக விளங்கியது. சூரிய அரசன் (Sun King) என அழைக்கப்பட்ட லூயிஸ் XIV அரசன் காலத்தில் (1643 – 1715) அரச மாளிகைகள் பாரிஸிலிருந்து, அண்மையிலுள்ள வெர்சாய்க்கு மாற்றப்பட்டது.

புவியியல்

பாரிஸ், சீன் ஆற்றின் வடக்கே திரும்பும் வளைவில் செயிண்ட் லூயி, டி லா சிட்டே என்னும் இரண்டு தீவுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. டி லா சிட்டே பாரிசின் பழைய பகுதியாகும். ஒப்பீட்டளவில் நகரம் மட்டமானது. மிகக்குறைந்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 35 மீட்டர் (115 அடி). பாரிஸ் பல குன்றுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் உயரமானது 130 மீட்டர் (427 அடி) உயரமான மொண்ட்மார்ட்ரே ஆகும். நகரின் புறப்பகுதியில் அமைந்துள்ள பொயிஸ் டி பொலோங்னே, பொயிஸ் டி வின்சென்ஸ் என்னும் பூங்காக்களைத் தவிர்த்து, பாரிசின் பரப்பளவு 86.928 சதுர கிலோ மீட்டர்கள் (34 சதுர மைல்கள்) ஆகும். இறுதியாக 1860 ஆம் ஆண்டில் நகரத்துடன் அதன் புறத்தே அமைந்திருந்த பகுதிகளையும் இணைத்துக்கொண்டது, நகருக்கு இன்றைய வடிவத்தை அளித்தது. 1860ல் நகர எல்லை 78 சதுர கிலோ மீட்டரில் இருந்து, 1920ல் 86.9 சதுர கிலோ மீட்டர் ஆகுவரை சிறிதளவு அதிகரித்துள்ளது. 1929 ஆம் ஆண்டில் பொயிஸ் டி பொலோங்னே, பொயிஸ் டி வின்சென்ஸ் என்னும் காட்டுப் பூங்காக்கள் நகருடன் இணைக்கப்பட்டன. இதனால் பாரிசின் மொத்தப் பரப்பளவு 105.397 சதுர மீட்டர்கள் (41 சதுர மைல்கள்) ஆனது.

காலநிலை

பாரிஸ், பெருங்கடல் காலநிலையைக் கொண்டது. இது வட அத்திலாந்திக் நீரோட்டங்களினால் பாதிக்கப்படுகின்றது. இதனால் நகரத்தில் அதி கூடிய வெப்பநிலையையோ அதி குறைந்த வெப்பநிலையையோ காண்பது அரிது. கோடையில் சராசரி வெப்பநிலைகளாக உயர்ந்த அளவு 25 °ச (77 °ப)ம், குறைந்த அளவு 15 °ச (59 °ப) ஆகவும் இருக்கும். குளிர் காலத்தில் குளிர் அதிகமாக இருந்தாலும் வெப்பநிலை உறை நிலைக்குக் கீழ் செல்வதில்லை. சராசர் வெப்பநிலைகள் 3 °ச (37 °ப) – 8 °ச (46 °ப) ஆகக் காணப்படும். இளவேனில் மற்றும் இலையுதிர் காலங்களில் பகலில் மிதமான வெப்பநிலையும், இரவில் குளிரும் இருக்கும். ஆண்டின் எந்த நேரத்திலும் இங்கே மழை முகில்கள் காணப்படலாம். பாரிஸ் அதிக மழை கொண்ட நகரம் இல்லாவிட்டாலும், சடுதியான மழைக்கு இந் நகரம் பெயர்பெற்றது. மழை வீழ்ச்சி ஆண்டுக்கு 650 மிமீ (26 அங்) ஆக உள்ளது. ஆனால் ஓரளவு மிதமான மழை வீழ்ச்சி ஆண்டு முழுதும் பரவலாகப் பெய்யும். பெரும்பாலும் பாரிசில் பனி பெய்வதில்லை. சில மாரிகாலங்களில் இலேசாகப் பனி பெய்வது உண்டு. பாரிசில் பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான வெப்பநிலை 40.4 °ச (105 °ப). இது 1948 ஜூலை 28 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. மிகக் குறைந்த வெப்பநிலை −23.9 °ச (−11 °ப). இது 1879 டிசம்பர் 10 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது. நகரின் மையப்பகுதியில் நகர்ப்புற வெப்பத் தாக்கம் காரணமாக இரவுகளிலும் காலையிலும் மிதமான வெப்பநிலை காணப்படுகின்றது. அத்துடன் நகரின் புறப்பகுதிகளைவிடக் குறைவான பனியும் பெய்கிறது.

நகர்த் தோற்றம்

அகலப்பரப்பு காட்சி

மின் ஒளியில் பாரிஸ் அகலப்பரப்பு காட்சி

கட்டிடக்கலை

தற்காலப் பாரிஸ், பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இடம் பெற்ற பெருமெடுப்பிலான நகர மீளமைப்புத் திட்டங்களின் விளைவாகும். பல நூற்றாண்டுகளாகப் பாரிஸ் ஒடுங்கிய தெருக்களையும், மரச் சட்ட வீடுகளையும் கொண்ட நகரமாக இருந்தது. ஆனால் 1852 தொடக்கம் ஓஸ்மான் பிரபுவின் நகராக்கத் திட்டங்களினால் பல பழைய கட்டிடங்கள் உடைக்கப்பட்டுச் சாலைகள் அகலமாக்கப்பட்டதுடன், இரண்டு பக்கங்களிலும் கல்லாலான புதிய செந்நெறிப் பாணிக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. இன்று வரை நிலைத்துள்ள பழைய கட்டிடங்கள் பெரும்பாலும் இக்காலத்தனவே. அக்காலத்தில் வரையறுக்கப்பட்ட “வரிசையாக்க” (alignement) சட்டவிதிகளைப் பாரிஸ் நகரம் பல புதிய கட்டிட வேலைகளில் இன்றும் பயன்படுத்தி வருவதனால், இந்த இரண்டாம் பேரரசுத் திட்டங்கள் பல இடங்களில் இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன எனலாம். கட்டிடங்களின் உயரங்களும் அன்று வரையறுக்கப்பட்ட சாலை அகலங்களின் அடிப்படையிலேயே இன்றும் தீர்மானிக்கப்படுகின்றன. அத்துடன், உயர்ந்த கட்டிடங்களை அமைக்கும் நோக்கில் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின் கட்டிடச் சட்ட விதிகளில் சில திருத்தங்களே செய்யப்பட்டுள்ளன.

Paris View from the Eiffel Tower second floor Seine downstream 02d.jpg

பாரிசின் எல்லைகள் மாறாமல் இருப்பதும், கட்டிடங்கள் கட்டுவதற்கான கடுமையான சட்டவிதிகளும், புதிய கட்டிடங்களுக்கான நிலங்கள் பற்றாக்குறையும் அருங்காட்சியகமாதல் (museumification) என்னும் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது. பாரிசின் வரலாற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளும், நகர எல்லைக்குள் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய பெரிய கட்டிடங்களையும், பிற சேவை வழங்கும் கட்டமைப்புக்களையும் அமைப்பதைக் கடினமாக்கியுள்ளது. பாரிசின் பல நிறுவனங்களும், பொருளாதாரக் கட்டமைப்புகளும் ஏற்கனவே புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ளன அல்லது இடம் பெயர்வதற்குத் திட்டமிடுகின்றன. நிதி வணிகப் பகுதி, முக்கியமான உணவு மொத்த விற்பனைச் சந்தை, முக்கியமான பெயர் பெற்ற பள்ளிகள் பல, உலகப் புகழ் பெற்ற ஆய்வுக் கூடங்கள், மிகப் பெரிய விளையாட்டு ஸ்டேடியம், போக்குவரத்து அமைச்சு போன்ற சில அமைச்சகங்கள், என்பன பாரிஸ் நகருக்கு வெளியே அமைந்துள்ளன. பிரான்சின் தேசிய ஆவணக் காப்பகம் 2010 ஆம் ஆண்டுக்கு முன் வடக்குப் புறநகர்ப் பகுதிக்கு இடம் பெயர உள்ளது. பாரிசை விரிவாக்க வேண்டிய தேவையை பிரான்ஸ் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நவம்பர் 2007ல் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், எந்தப் பகுதிகளைப் பாரிசுடன் இணைப்பது என்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

புறநகர் மற்றும் பாரிஸ் பெரு நகரப் பிரதேசங்களில்(Île-de-France)

வெற்றி வளைவு
 • வணிகப் பகுதிகள்
  • La Défense – மேற்குப் பாரிஸிலுள்ள முக்கியமான அலுவலக, அரங்க மற்றும் கொள்வனவுத் தொகுதி
 • கேளிக்கைப் பூங்காக்கள்
  • டிஸ்னிலாண்ட் Resort பாரிஸ் – பாரிஸின் கிழக்கேயுள்ள, Marne-la-Vallée யின் புற நகர்ப் பகுதியிலுள்ளது
  • Parc Astérix, பாரிஸின் வடக்கில்
 • நினைவுச் சின்னங்கள்
  • Grande Arche de la Défense
  • வேர்செயில்ஸ் அரண்மனை – பாரிஸின் வட கிழக்கிலுள்ள வெர்சாய் நகரில் அமைந்துள்ள லூயிஸ் XIV இனதும் பின் வந்த அரசர்களினதும் அரச மாளிகைகள். பிரான்ஸின் அதிக சுற்றுலாக் கவர்ச்சியுள்ள இடம்.
  • Vaux-le-Vicomte, மெலுனுக்கு அண்மையிலுள்ள சிறிய அரச மாளிகை. இதனைப் பின்பற்றியே வெர்சாய் மாளிகைகள் வடிவமைக்கப்படன.
  • செயிண்ட் டெனிஸ் பசிலிக்கா – பண்டைய கொதிக் தேவாலயம் மற்றும் பல பேரரசர்களின் புதைகுழிகள், நகரின் வடக்கிலுள்ளது.

நிகழ்ச்சிகள்

நொட்ரே டேமின் காட்சி மண்டபத்திலிருந்து பாரிஸ் நகரக் காட்சி
 • 52 BC – பின்னர் பாரிஸான லூதேசியா, கல்லோ-ரோமரினால் கட்டப்பட்டது
 • 1113 – பியரே அபிலார்ட் தன்னுடைய பாடசாலையை ஆரம்பித்தார்
 • 1163 – நொட்ரே டேமின் கட்டிட வேலைகள் ஆரம்பம்
 • 1257 – Sorbonne பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது
 • 1682 – லூயிஸ் XIV moves the French court from the Tuileries palace to Versailles
 • July, 1789 – Storming of the Bastille
  • அரச குடும்பம் வேர்செயில்சிலிருந்து பாரிசுக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டது.
 • 1814 – நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆறாவது கூட்டணிப் படைகள் பாரிஸை ஆக்கிரமித்தன.
 • 1815 – நூறு நாட்கள் முடிவுக்குப் பின்னர் பாரிஸ் மீண்டும் ஏழாவது கூட்டணிப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.
 • 1840 – நெப்போலியனின் உடல் Les Invalides இல் அடக்கம் செய்யப்பட்டது.
 • 1853 – Baron Haussmann பாரிஸின் மையப் பகுதியை மீளமைத்தார்
 • 1855 – Exposition Universelle (1855)
 • 1856 – பாரிஸ் மகாநாடு கூட்டப்பட்டது

லாண்ட்சட் 7இலிருந்து எடுக்கப்பட்ட, பாரிஸின் இன்னொரு simulated-நிற செய்மதிப் படிமம். இது பாரிஸ் நகர மத்திய பகுதியைப் பெருப்பித்துக் காட்டுகிறது